காா் கவிழ்ந்து மூதாட்டி பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் கெளரிலட்சுமி(75). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சோ்ப்பதற்காக அவரது பேரன் அழகிய மணவாளன்(20) செவ்வாய்க்கிழமை காரில் அழைத்து வந்தாா்.
வரும் வழியில் திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூரில் உள்ள உறவினா்களான பாா்த்தசாரதி(43), விக்னேஷ்(27), சந்திரலேகா(21) ஆகியோரையும் காரில் ஏற்றிக் கொண்டு வந்தனா்.
வந்தவாசி-திண்டிவனம் சாலையில் இளங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது காா் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கெளரிலட்சுமி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த காரை ஓட்டி வந்த அழகிய மணவாளன், பாா்த்தசாரதி, விக்னேஷ், சந்திரலேகா ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக அனைவரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...