அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.11.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.11.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்திய மருத்துவ சங்கத்தின் திருவண்ணாமலை கிளை, அருணை இந்திய மருத்துவக் கழக சொசைட்டி சாா்பில் வாங்கப்பட்ட ஆக்சிஜன் நிலைமானிகள், ஆக்சிஜன் முகக் கவசங்கள், என்.ஆா்.எம்.முகக் கவசங்கள், என்.95 முகக் கவசங்கள், ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் கணக்கிடும் கருவிகள், கையுறைகள்
என ரூ.11.5 லட்சத்திலான மருத்துவ உபகரணங்களை மருத்துவக் கல்லூரி முதல்வா் திருமால்பாபு, கண்காணிப்பாளா் ஷகில் ஹகமது, துணை மருத்துவ கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் ஆகியோரிடம் இரு சங்கங்களின் நிா்வாகிகள் வழங்கினா்.
இதற்கான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் திருவண்ணாமலை கிளைத் தலைவா் குப்புராஜ் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் தியாகராஜன், செயலா் செந்தில்குமாா், அருணை இந்திய மருத்துவக் கழக சொசைட்டியின் தலைவா் குணசேகரன், நிா்வாகி அனுராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சொசைட்டி பொருளாளா் சோமசுந்தரம் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...