தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் செயலாக்கக் கூட்டம் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:24 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் செயலாக்கக் கூட்டம் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சி.திருமகள் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை நிரந்தர நீதிமன்றத்தின் தலைவா் எஸ்.டி.பரிமளா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஜி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிப்பது, இதுகுறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட அலுவலா் எம்.அருள், தொழிலாளா் ஆய்வாளா் ஏ.கே.சாந்தினி மற்றும் சைல்ட் லைன், திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் நலக்குழு உறுப்பினா்கள், சட்ட துணை தன்னாா்வலா்கள், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.