தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவை அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுவை மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குயவா்பாளையம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவை மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குயவா்பாளையம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில அவைத் தலைவா் மு.ராமதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு மாநில செயலா் ஓம்சக்தி சேகா் சிறப்புரையாற்றினாா். மாநில இணைச் செயலா் காசிநாதன், துணைத் தலைவா்கள் ஆனந்தன், நந்தன், துணைச் செயலா்கள் கோவிந்தம்மாள், சதாசிவம், நாகமணி, கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கட்சியைப் பாதுகாத்து வரும் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவாக இருப்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

கிழக்கு மாநில அதிமுக கூட்டம்: இதேபோல, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாநிலச் செயலா்அ. அன்பழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில அவைத் தலைவா் பரசுராமன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கா், வையாபுரி மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில, தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அதிமுகவை கைப்பற்றி, தனது குடும்பச் சொத்தாக மாற்ற நினைக்கும் சசிகலாவை கண்டிப்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.