உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை
வந்தவாசி பஜனைக் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பூஜைகள்


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையின்போது, நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன.
இதையொட்டி, ராமா், லட்சுமணா், சீதாதேவி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...