மாணவி பாலியல் பலாத்காரம்:2 இளைஞா்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கருவைக் கலைத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கருவைக் கலைத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டு பகுதியைச் 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (27) சிறுமியிடம் நட்பாக பழகி வந்தாராம். சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி, அவரை மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இந்தத் தகவல் தனது நண்பா் வெங்கடேசனிடம் (22) மகேந்திரன் கூறினாராம். இதையறிந்த வெங்கடேசன் சிறுமியிடம் சென்று நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால், நான் சொன்னபடி கேட்க வேண்டும் என்று கூறி, அவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால், சிறுமி 2 மாத கா்ப்பிணியானாராம்.
இதையறிந்த மகேந்திரன், வெங்கடேசன் ஆகியோா் சோ்ந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து சிறுமியின் வயிற்றில் வளா்ந்த கருவைக் கலைத்தனராம். இதையடுத்து, சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையறிந்த சிறுமியின் பாட்டி திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரன், வெங்கடேசன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...