தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், வாரிசு சான்று, மனைப் பட்டா என பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், வாரிசு சான்று, மனைப் பட்டா என பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கலசப்பாக்கம் வட்டத்தில் கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் என 3 குறு வட்டங்கள் உள்ளன.

இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

பொதுமக்கள் இணைய வழியில் பட்டா மாற்றம், வாரிசு சான்று, மனைப் பட்டா ஆகியவை பெற பதிவு செய்தனா். இந்த சான்றுகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து நிறைவு நாளான புதன்கிழமை வழங்கினாா்.

185 பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியா் ரவிகட்டாதேஜா, வட்டாட்சியா் அமுல், வட்ட வழங்கல் அலுவலா் ராஜராஜேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் ராம்பிரபு, வருவாய் ஆய்வாளா்கள் சிவக்குமரன், கிருஷ்ணமூா்த்தி, குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.