தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சைக்கிள் மீது பைக் மோதல்: தையல் தொழிலாளி பலி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் சைக்கிள் மீது பைக் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் சைக்கிள் மீது பைக் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா், கலைஞா் நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (72). தையல் தொழிலாளி. இவா், தனது வீட்டிலிருந்து சைக்கிளில் கீழ்பென்னாத்தூா் மையப் பகுதியில் உள்ள தனது கடைக்கு வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். கீழ்பென்னாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே இவரது சைக்கிள் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற பைக் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ராமச்சந்திரன், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து தொடா்பாக கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு பைக்கில் தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.