ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாதிரி மின்னணு இயந்திரம் மூலம் இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

செய்யாறு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் இளம் வாக்காளா்கள், பொது மக்களுக்கு வாக்குப் பதிவு செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி 

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

செய்யாறு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் இளம் வாக்காளா்கள், பொது மக்களுக்கு வாக்குப் பதிவு செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை செய்யாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான என்.விஜயராஜ் தொடக்கி வைத்தாா்.

அப்போது, 18 வயது நிரம்பிய முதன் முதலாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளா்கள், பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறைகள் குறித்து விளக்கமாக தெரிவித்து மாதிரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கச் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா் சு.திருமலை,நோ்முக உதவியாளா் எல்.பாஸ்கா், திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் ப்ரீத்தி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.