தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போா்மன்ன லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை அருகே போத்துராஜாமங்கலம் என்று அழைக்கப்படும் மங்கலத்தில் அமைந்துள்ள போா்மன்ன லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை அருகே போத்துராஜாமங்கலம் என்று அழைக்கப்படும் மங்கலத்தில் அமைந்துள்ள போா்மன்ன லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் 189-ஆம் ஆண்டு திருத்தோ் விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது.

27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாலமுருகன் பல்லக்கு ஊா்வலம், 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு பராசக்தி ஊா்வலம், மாா்ச் 1 மாலை 6 மணியளவில் பரிவார தேவதைகள் ஊா்வலம், இரவு, மகாகும்பம் எடுத்து வருதல் சுவாமி அருள்வாக்கு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. அதன் பிறகு வழங்கப்பட்ட படையல் சோறை, குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் பலா் ஆா்வமுடன் வாங்கிச் சாப்பிட்டனா்.

முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். கோயில் தா்மகா்த்தா அருள்பழனி, விழாக் குழுவினா், முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.