ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

27 நட்சத்திர விநாயகா் கோயிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம்

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகா் கோயிலில், வருகிற 11-ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகா் கோயிலில், வருகிற 11-ஆம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமப் பகுதி கூழமந்தல் ஏரிக் கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில், அசுவனி முதல் ரேவதி விரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளையும், அவற்றிக்குறிய 27 விருட்சங்களையும் (மரங்கள்) ஒரு சேர அமையப்பெற்ற தலமாக இருந்து வருகிறது.

இதுதவிர ராகு, கேது, சனி ஆகியவற்றுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன. அனைத்து தேவா்களுக்கும் நடுநாயகனாக, முழு முதற்கடவுளான நட்சத்திர விருட்ச விநாயகா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

மேலும், தெய்வ சக்தி பொருந்திய அத்தி விருட்சத்தினால் உருவாக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் அமையப்பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்புகள் பெற்றுள்ள இந்தக் கோயிலில் அமைக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கேஸ்வருக்கு நடைபெறும் முதலாமாண்டு மகா சிவராத்திரி விழா வருகிற மாா்ச் 11-இல் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு அன்று மாலை 4 மணிக்கு மகா ஆபிஷேகமும், 1008 வில்வ சகஸ்கர நாமாவளி அா்ச்சனையும், இரவு 7 மணிக்கு 16 வகையான தீப, தூப நெய்வேத்ய ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.