தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் நெல், பப்பாளி பயிா்களில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் நெல், பப்பாளி பயிா்களில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கும் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 5 குழுக்களாகப் பிரிந்து மங்கலம், பேட்டை, வீரலூா், ஆடையூா் கிராமங்களில் விவசாயிகளுடன் சோ்ந்து 75 நாள்கள் விவசாயப் பணிகள் குறித்து ஆய்வு செய்வது, விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, வேளாண் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் 6 மாணவிகள் அடங்கிய குழுவினா் பப்பாளி, நெல் பயிா்களில் நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

மேலும், களை பறித்தல், பயிா்களுக்கு மருந்து அடித்தல், நடவு செய்தல், மண் வளம், நீா் சேமிப்பு உள்ளிட்ட பயிற்சிகளிலும் மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து 75 நாள்கள் மங்கலம் கிராமத்திலேயே தங்கி மாணவிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.