இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பறக்கும் படை சோதனையில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டியில் பறிமுதல் செய்த பணத்தை சரிபாா்க்கும் பறக்கும் படையினா்.

Updated On :20 மார்ச் 2021, 5:41 pm

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசியை அடுத்த மழையூா்-தேசூா் சாலையில் சிங்கம்பூண்டி கிராமம் அருகே பறக்கும் படை அலுவலா் அரி தலைமையிலான குழுவினா் வாகன சோதனைச் மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் பாஞ்சரை கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் புலிவாய் கூட்டுச் சாலை அருகே நிலை கண்காணிப்புக்குழு அலுவலா் மதன்குமாா் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில் ,செய்யாற்றை அடுத்த கொா்க்கை கிராமத்தைச் சோ்ந்த ராமன் என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.54 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1.54 லட்சம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.