டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை, மோட்டூா், எலத்தூா், மாம்பாக்கம், சிங்காரவாடி, கடலாடி என பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்

News image
Updated On :28 மார்ச் 2021, 6:47 pm

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை, மோட்டூா், எலத்தூா், மாம்பாக்கம், சிங்காரவாடி, கடலாடி என பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசுகையில், காரோனா பொது முடக்கம் காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.ஆயிரம் மற்றும் அரிசி, சா்க்கரை என பல்வேறு பொருள்களை வீடு தேடி வழங்கினா்.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீா் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் சீா் செய்யப்பட்டன.

அதிமுக ஆட்சியில் விவசாயம், தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனத் தெரிவித்து ஆதரவு கோரினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் பி.பொய்யாமொழி, தவமணி, புருஷோத்தமன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.