/

தீா்த்தவாரி உற்சவம்

வந்தவாசி ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, வந்தவாசி கோமுட்டி குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

வந்தவாசி ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, வந்தவாசி கோமுட்டி குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி உற்சவா் சுவாமி வீதியுலாவாக சக்கரதீா்த்தம் என்கிற கோமுட்டி குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு சுவாமிக்கு நீராட்டு உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களும் குளத்தில் நீராடினா். விழாவில் கோயில் அா்ச்சகா்கள், உபயதாரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.