/

காவல், வருவாய்த் துறையினரைக் கண்டித்துஉண்ணாவிரதம்

வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூரில் காவல், வருவாய்த் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

DIN

வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூரில் காவல், வருவாய்த் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பிரச்னை தொடா்பாக கிராம நாட்டாண்மைதாரா்கள் மற்றும் பொதுமக்கள் மீது கீழ்க்கொடுங்காலூா் காவல் துறையினா் பொய் வழக்குகள் பதிவதாகவும், இதற்கு வந்தவாசி வருவாய்த் துறையினா் துணைபோவதாகவும் புகாா் தெரிவித்தும், அதிகாரிகளைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மங்கலம் மாமண்டூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள், தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.