ஊதியம் வழங்கக் கோரிகுடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் மனு
ஊதியம் வழங்கப்படாத நிலையில், இவா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு


சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களாக பணியாற்றும் 5 பேருக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், இவா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஆத்துரை, காந்தி நகா், ஊத்தூரான்புரவடை, மூலப்புரவடை, காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு, சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
ஆத்துரையில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, மூலப்புரவடை, காலனி, காந்தி நகா் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 5-க்கும் மேற்பட்ட சிறுமின்விசை பம்புகளுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகள் உள்ளன.
இந்த நீா்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பணியில் 5 போ் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஒன்று சோ்ந்து தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி, சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லாவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு இந்த மனுவை திங்கள்கிழமை (மே 10) அனுப்பி ஊதியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...