/

பூங்காவை தூய்மை செய்த தன்னாா்வ அமைப்பினா்

வந்தவாசியில் உள்ள நகராட்சி பூங்காவை தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப்படுத்தினா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

DIN

வந்தவாசியில் உள்ள நகராட்சி பூங்காவை தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப்படுத்தினா்.

வந்தவாசி நகராட்சி சாா்பில், வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி, குளம் மற்றும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் வீசிச் செல்லும் நெகிழிக் குப்பைகளால் குளம் உள்ளிட்ட பூங்கா பகுதி அசுத்தமடைந்த நிலையில் இருந்தது.

இந்த நிலையில், வந்தவாசி தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்த கேசவராஜ், அசாரூதின், உதயகுமாா், வசீகரன் உள்ளிட்டோா் பூங்கா குளத்தினுள் வெள்ளிக்கிழமை இறங்கி, அதிலிருந்த நெகிழி, தொ்மாகோல் குப்பைகளை வலை மூலம் எடுத்து அகற்றினா். மேலும், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளிலிருந்த குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.