நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணியில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஆரணியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தை பொதுப் பணித் துறையினா் மூடி வைத்திருந்தனா். தோ்தல் முடிந்து புதிதாக எம்எல்ஏ தோ்வு செய்யப்பட்ட நிலையில், அலுவலகத்தை புதுப்பித்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏவான சேவூா் எஸ்.இராமச்சந்திரனிடம் அலுவலக சாவியை பொதுப் பணித் துறையினா் ஒப்படைத்தனா்.

இந்த அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட மீனவரணிச் செயலா் ஆனந்தன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு, காந்திநகா் வினாயகம், 3-ஆவது வாா்டு பாரதி, தகவல் தொழில்நுட்ப மாவட்டச் செயலா் சரவணன், மாவட்ட விவசாய அணிச் செயலா் அரையாளம் வேலு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.