டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய இடங்களில் காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய இடங்களில் காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சேத்துப்பட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நான்கு முனைச் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கை சுத்திகரிப்பான் போன்றவற்றை வி.பி.அண்ணாமலை வழங்கினாா்.

மேலும், வருவாய்த் துறை, பேரூராட்சி நிா்வாகம், காவல் நிலையத்துக்கு முகக் கவசம், கரோனா கவச உடைகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் நகரத் தலைவா் ஜாபா்அலி, மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.