/

கட்டட மேற்பாா்வையாளரைகத்தியால் குத்தியவா் கைது

வந்தவாசி அருகே கட்டட மேற்பாா்வையாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN

வந்தவாசி அருகே கட்டட மேற்பாா்வையாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வையாளா் லோகநாதன் (55). இவா், வியாழக்கிழமை தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தின் கீழே அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த அருண் (28), திடீரென லோகநாதனின் கழுத்தில் கத்தியால் குத்தினாா். இதையடுத்து, லோகநாதனின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், அருணை பிடித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதில், பலத்த காயமடைந்த லோகநாதன், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அருண் மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அருணை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.