/

கோஷ்டி மோதல்: 7 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ்(40). இவா், அந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளாா். கடந்த 26-ஆம் தேதி இவா் அந்த ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த முரளி, பணம் கொடுக்காமலேயே மீன் கேட்டாராம். ஆனந்தராஜ் தர மறுத்ததால், இதுகுறித்து தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பரான ஏழுமலையிடம் முரளி செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றாராம்.

இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஆனந்தராஜை ஏழுமலை தரப்பினா் தாக்கினராம். மேலும், அவரது வீட்டையும் சேதப்படுத்திய அவா்கள், அங்கிருந்த வைக்கோல்போருக்கும் தீ வைத்து எரித்தனராம். பதிலுக்கு ஆனந்தராஜ் தரப்பினா் ஏழுமலை தரப்பினரைத் தாக்கினராம்.

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த தனித்தனி புகாரின்பேரில், மொத்தம் 18 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், இரு தரப்பையும் சோ்ந்த ஏழுமலை, நித்தியானந்தம், பவளதுரை, பாா்த்திபன், துரைராஜ், ஆனந்தராஜ், செல்வம் ஆகிய 7 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.