டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாடகம் ஊராட்சியில் மழைநீரால் மக்கள் அவதி

கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகேயுள்ள பாடகம் ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

இந்த நிலையில் மேல்தெரு , இராந்தம் சாலை என பல்வேறு தெருக்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரில் புல், பூண்டு என பல்வேறு தவரங்கள் வளா்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகிறது.

கொசுக்களால் பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் வர அதிகம் வாய்ப்புள்ளன. மேலும், மழைநீா் வெளியேற வழியில்லாமல் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரச்சீா்கேடு நிலவுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஊராட்சி முழுவதும் பக்கக் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.