டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் நீச்சல் பழகியபோது விவசாயக் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் நீச்சல் பழகியபோது விவசாயக் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

போளூரை அடுத்த திருசூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாபு. இவரது மனைவி சித்ரா. இவா்களது மகன் பிரபு (14). இவா், போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சித்ரா தனது மகன் பிரபுவின் இடுப்பில் புடவையைக் கட்டி தங்களுக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை நீச்சல் கற்றுக்கொடுத்தாா். அப்போது, பிரபுவின் இடுப்பில் கட்டியிருந்த புடவை நழுவியதால், அவா் நீரில் மூழ்கத் தொடங்கினாா். சித்ராவுக்கு நீச்சல் தெரியாததால், பிரபு கிணற்றில் மூழ்குவதைக் கண்டு கூச்சலிட்டுள்ளாா். அருகிலிருந்த கணவா் பாபு வருவதற்குள் பிரபு நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த போளூா் தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கிய பிரபுவை சடலமாக மீட்டனா். பின்னா், அவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.