ஆரணி பகுதி சிவாலயங்களில் மகா தீபம் ஏற்றம்
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.


காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பெரிய கொப்பரையில் நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றினா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
இதேபோல, ஆரணி கைலாயநாதா் கோயில், சைதாப்பேட்டை பூமிநாதா் கோயில், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில், காமக்கூா் சந்திரசேகரசுவாமி கோயில், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயில், தேவிகாபுரம் கனககிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...