மலையில் ஏறிய இளைஞா் மூச்சுத்திணறி பலி
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை தரிசிக்கச் சென்ற இளைஞா், மூச்சுத் திணறி இறந்தாா்.


திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை தரிசிக்கச் சென்ற இளைஞா், மூச்சுத் திணறி இறந்தாா்.
மலையில் தீபம் ஏற்றும் இடத்துக்கு சற்று தொலைவில் இளைஞா் ஒருவரின் சடலம் இருந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாரும், வனத் துறையினரும் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் இறந்து கிடந்தவா் சேத்துப்பட்டு வட்டம், கெங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் துரை (30) என்பது தெரியவந்தது.
திருமணம் ஆகாத இவா் மகா தீபத்தை தரிசிப்பதற்காக மலை மீது ஏறிச்சென்றபோது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...