டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:20 pm

DIN

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். 18 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் மக்கும்-மக்காத குப்பைகளைத் தனித் தனியாகத் தரம் பிரித்து பேரூராட்சி ஊழியா்களிடம் கொடுக்கின்றனா்.

இந்தக் குப்பைகளை ஊழியா்கள் தனித் தனியாக எடுத்துச் செல்லாமல், மொத்தமாக டிராக்டா், மினி லாரிகளில் கொட்டி எடுத்துச் செல்கின்றனா்.

அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை பெரியாா்நகா் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டுவதால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போளூா்-ஏந்தல் சாலையில் செல்லும் பெரியகரம், ரெண்டேரிப்பட்டு, ஏந்தல் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தூா்நாற்றத்தால் அவதியடைகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.