நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலீஸாரைக் கண்டித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் போலீஸாரைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் போலீஸாரைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த சேவூா் அருகேயுள்ள முள்ளண்டிரம் காலனி பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி(21), கடந்த இரு தினங்களுக்கு முன்பு எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து, சேவூா் காலனி பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தியின் உறவினா்கள், அவா் உயிரிழக்கக் காரணமான லாரியின் உரிமையாளரான முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்த்த செந்தில்வேலன் வீட்டுக்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செந்தில்வேலன் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சேவூா் காலனியைச் சோ்ந்த சிலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இதனால் அதிருப்தியடைந்த சேவூா் காலனி பகுதி மக்கள், விசாரணைக்காக அழைத்துச் சென்றவா்களை விடுவிக்கக் கோரி, ஆரணி - வேலூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற ஆரணி போலீஸாா், சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அந்தச் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.