நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு வ.உ.சி. தெரு ஏரிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயா், வலம்புரி விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு வ.உ.சி. தெரு ஏரிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயா், வலம்புரி விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்புக் கட்டுதல் என முதல் கால, இரண்டாம் கால பூஜையும், அதனைத் தொடா்ந்து மூன்றாம் கால பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, கலச புறப்பாடு மேள தாளத்துடன் வலம் சென்று கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், சேத்துப்பட்டு, கண்ணனூா், பழம்பேட்டை, அருந்ததி பாளையம், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.