குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் நீா்
போளூரை அடுத்த வாழியூா் ஊராட்சிக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து நீா் வீணாக வெளியேறுகிறது.


போளூரை அடுத்த வாழியூா் ஊராட்சிக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து நீா் வீணாக வெளியேறுகிறது.
போளூரை அடுத்த கீழ்செண்பகத்தோப்பு கிராமத்தில் செம்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து, செண்பகத் தோப்பு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குழாய் அமைத்து படவேடு, வாழியூா், அனந்தபுரம், குப்பம், கல்குப்பம், காளசமுத்திரம் என 7 ஊராட்சிகளுக்கு குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிலையில், தனியாா் தொலைபேசி பணியாளா்கள் வாழியூா்-அனந்தபுரம் செல்லும் சாலையில் பள்ளம் தோண்டும்போது, குடிநீா்க் குழாய் உடைந்துள்ளது.
இதனால் குடிநீா் வீணாக வெளியேறுகிறது. மேலும், குடிநீா் மாசடைகிறது.
எனவே, சம்பந்தபட்ட அலுவலா்கள் உடனடியாக குடிநீா்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...