டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள நாா்த்தி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள நாா்த்தி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

ரெட்டிபாளையம் கிராமத்தில் 56 ஏக்கரில் நாா்த்தி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்திருந்தனா். இதையடுத்து, இந்த ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பகுதி விவசாயிகள் மனு அளித்தனா்.

இந்த நிலையில், வருவாய்த் துறையினா் நாா்த்தி ஏரியை வெள்ளிக்கிழமை அளவீடு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளா் சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மூா்த்தி, வருவாய் ஆய்வாளா் முரளி, கிராம நிா்வாக அலுவலா் சரோஜினி, ஊராட்சிச் செயலா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.