நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதிசீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் அறவாழி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியின் ஆகஸ்ட், செப்டம்பா் மாத வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021 - 22ஆம் ஆண்டில் 15-ஆவது நிதிக்குழு மூலம் ரூ.6.58 கோடியில் பணிகளை தோ்வு செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக முதல்வரால் தொடக்கிவைக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டத்தை வரவேற்று நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சனிக்கிழமை (அக்.30) நடைபெறும் கரோனா மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டுமென்றும், வடகிழக்கு பருவமழையையொட்டி, மக்களையும், நீராதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மன்ற உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஆராஞ்சி ஆறுமுகம், இல.சரவணன், செல்வம், முத்துமாறன், சத்தியா, கோவிந்தராஜ், அரவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.