தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கி.பி.13-ஆம் நூற்றாண்டு கோமாரி குத்துக்கல் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மந்தைவெளி மாட்டுக்கல் என்ற அரிய வகை கோமாரி குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:39 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மந்தைவெளி மாட்டுக்கல் என்ற அரிய வகை கோமாரி குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டது.

செய்யாறு அருகேயுள்ள செய்யாற்றைவென்றான் கிராமத்தில் பச்சையப்பன் என்பவரது வீட்டின் அருகே திறந்தவெளியில் அரிய வகை கோமாரிக்கல்லை (குத்துக்கல்) வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டறிந்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

செய்யாற்றைவென்றான் கிராமத்தில் மந்தைவெளி மாட்டுக்கல் என்னும் கோமாரி குத்துக்கல் நான்கு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருவதாகத் தெரிகிறது.

இதை ஆய்வு செய்தபோது சதுர, வட்ட வடிவிலான கட்டங்கள் அமைத்து மந்திர எழுத்துகள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் பொறிக்கப்பட்டிருந்த கால்நடைகள் உருவமும், எழுத்துகளும் காலப்போக்கில் மறைந்திருக்கலாம்.

கோமாரி குத்துக்கல்லை ஊா்மக்கள் துா்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனா். கால்நடைகளை கோமாரி போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, இந்தக் கல்லை சுற்றி வரச் செய்து வழிபட்டு அழைத்துச் செல்வதை கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இதுபோன்ற வழிபாட்டு முறை சோழா், பல்லவா் காலத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது. இந்தத் குத்துக்கல் கி.பி.13, 14-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம்.

தற்போது, மாட்டுப் பொங்கல் தினத்தன்று கால்நடைகளை கோமாரி குத்துக்கல்லை சுற்றவைத்து வழிபட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனா்.

மேலும், குத்துக்கல்லின் எதிரில் சிறிய அளவிலான நந்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.