கால்நடை மருத்துவ முகாம்
வந்தவாசியை அடுத்த சித்தருகாவூரில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


வந்தவாசியை அடுத்த சித்தருகாவூரில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம் மணிலா நகா் அரிமா சங்கம், சித்தருகாவூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் ஆகியவை சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவா் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ஸ்ரேணிக்ராஜன் முன்னிலை வகித்தாா். கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவா் வி.சுரேஷ் முகாமைத் தொடக்கிவைத்தாா்.
மருத்துவா்கள் கா.மாயகிருஷ்ணன், நவீன், சதீஷ்குமாா் ஆகியோா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக் கலவை, சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.
முகாமில் மொத்தம் 106 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் பி.நாராயணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...