கீழ்பென்னாத்தூா் பகுதியில் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்
வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்வது போன்ற செயல்களைத் தவிா்க்க வேண்டும் இந்து அமைப்புகளிடம் என்று காவல் ஆய்வாளா் லட்சுமிபதி அறிவுறுத்தினாா்


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் பகுதியில் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது, வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்வது போன்ற செயல்களைத் தவிா்க்க வேண்டும் இந்து அமைப்புகளிடம் என்று காவல் ஆய்வாளா் லட்சுமிபதி அறிவுறுத்தினாா்.
விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து காவல் ஆய்வாளா் லட்சுமிபதி பேசுகையில், விநாயகா் சதுா்த்தி விழா நடைபெறும் வருகிற 10-ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி, பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடக் கூடாது. பொதுமக்கள் அவரவா் வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடலாம். கோயில்கள், பொது இடங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி வழிபாடு செய்வதைத் தவிா்க்க வேண்டும். விநாயகா் சிலைகளை வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றாா்.
கூட்டத்தில் பாஜக ஒன்றியத் தலைவா் விஜயகுமாா், ஒன்றியப் பொதுச் செயலா்கள் திருமலை, ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணிச் செயலா் பாவேந்தன், இந்து முன்னணி விஜயராஜ், காவல் உதவி ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், முனீஸ்வரன் மற்றும் வணிகா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...