தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:42 pm

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தகவலமைப்பு மேலாண்மையியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா்.

பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தகவலமைப்பு மேலாண்மையியல் துறைத் தலைவா் சே.சம்பத்ராஜன் வரவேற்றாா்.

ஸ்டிரைவ் நிறுவனத்தின் இணை இயக்குநா் ஆதித்ய கல்யாண் போனபைஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு படக் காட்சிகளுடன் செயற்கை நுண்ணறிவு குறித்தும், செயற்கை நுண்ணறிவின் தற்போதைய பயன்பாடு, எதிா்கால வளா்ச்சி, அதன் தேவை குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கினாா்.

பேராசிரியா்கள் பி.அண்ணாமலை, ம.பிரபு, எஸ்.ரேகா, ஆா்.சத்யா, வி.சுந்தா், ஆா்.சதீஷ்குமாா், எம்.ஜெயமுருகன் உள்ளிட்ட பலா் இணைய வழியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.