அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா: பள்ளி மூடல்

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டத

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:06 am

DIN

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தப் பள்ளியில் 9, 10 ஆகிய வகுப்புகளில் 35 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி வளாகத்தில் உள்ள குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், குறுவள மையத்தில் பயிற்சி பெறும் ஆசிரியா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பயிற்சி பெறும் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி வியாழக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.