/

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கூட்டம்

வந்தவாசி அருகே காரணை, காவணியாத்தூா் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:09 am

DIN

வந்தவாசி அருகே காரணை, காவணியாத்தூா் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டாரத்தில் காரணை, காவணியாத்தூா், செம்பூா் ஆகிய 3 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக காரணை, காவணியாத்தூா் கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள், மானிய விவரங்கள், உற்பத்தித் திறனை அதிகரித்தல், விற்பனை தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வி.சிதம்பரம், வேளாண்மை உதவி இயக்குநா் பாண்டியன், வேளாண்மை பொறியியல் துறை அலுவலா் டி.அருண், வேளாண்மை வணிகத் துறை அலுவலா் எ.பிரபு ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.