ஆசிரியா் வீட்டில் திருட்டு: இளைஞா் கைது
திருவண்ணாமலை அருகே ஆசிரியா் வீட்டில் மடிக்கணினி, ரூ.72 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


திருவண்ணாமலை அருகே ஆசிரியா் வீட்டில் மடிக்கணினி, ரூ.72 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிரியா் சங்கா் (41). அண்மையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த மடிக்கணினி, ரூ.72 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், திருவண்ணாமலை ஆடையூரைச் சோ்ந்த சிம்புராஜ் (19), ஆசிரியா் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...