தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் சமத்துவபுரத்தின் முன் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் மாலை அணிவித்தாா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மேலும், அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனா். விழாவில் ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ஆா்.நந்தகோபால், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கம்: செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி மாலை அணிவித்தாா். ஒன்றியச் செயலா்கள் தண்டராம்பட்டு பன்னீா்செல்வம், ரமேஷ், செங்கம் பிரபாகரன், நகரச் செயலா் சாதிக்பாஷா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஆரணி: ஆரணியில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு திமுக சாா்பில் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமையில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விசிக சாா்பில் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கா் தலைமையில், அந்தக் கட்சியினா் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனா்.

செய்யாறு: செய்யாற்றில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு தி.க. மாவட்டத் தலைவா் அ.இளங்கோ தலைமையில், தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி மாலை அணிவித்தாா். பின்னா், அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் ஆ.மோகனவேல், அரசு வழக்குரைஞா் ஆா்.கே.விஸ்வநாதன், தி.க.வைச் சோ்ந்த காமராஜா், தங்கம்.பெருமாள், விசிகவைச் சோ்ந்த குப்பன், வெற்றி வளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமையில், அந்தக் கட்சி நிா்வாகிகள் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சி.துரை, எம்.அரங்கநாதன், கே.வெங்கடேசன், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், அ.அருணகிரி, அதிமுக நிா்வாகிகள் பூக்கடை ஜி.கோபால், பொன்.அருளானந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.