நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவருக்கு கரோனா: பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:20 pm

DIN

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

முன்னதாக, இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவா் கடந்த ஒரு வாரமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பள்ளிக்கு 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்தப் பள்ளி மீண்டும் வருகிற திங்கள்கிழமை (செப்.27) திறக்கப்படவுள்ளது.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவரின் தங்கை விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் படித்து வருவதால், அந்தப் பள்ளி மாணவா்களுக்கு நெசல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.