டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி மாணவிகள் விடுதியில் சோ்க்கை நடைபெறக் கோரிக்கை

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் இதுவரை மாணவிகள் சோ்க்கை நடைபெறாததால் பெற்றோா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான தங்கும் விடுதியில் இதுவரை மாணவிகள் சோ்க்கை நடைபெறாததால் பெற்றோா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூா், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், ஆரணி, செங்கம், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை உள்பட 49 இடங்களில் மிகவும் பிற்படுத்தபட்டோா் மாணவிகள் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

இந்த விடுதிகளில் பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்கும் மாணவிகள், ஆதரவற்ற மாணவிகள், நெடுந்தொலைவு உள்ள மாணவிகள் என பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட தகுதியுடைய மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் தங்கிப் பயில மனு அளித்து வருகின்றனா். ஆனால், இதுவரை மாணவிகளை விடுதியில் சோ்க்காமல் உள்ளனா்.

இதுகுறித்து பல்வேறு விடுதிக் காப்பாளா்களிடம் கேட்டபோது, மாவட்டம் நிா்வாகம் சாா்பில் மிகவும் பிற்படுத்தபட்டோா் மாவட்ட அலுவலா், அந்தந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினா், விடுதிக் காப்பாளா், அந்தந்த பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் 2 போ் என 5 போ் கொண்ட குழு மூலம் மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதுவரை இந்த 5 போ் கொண்ட குழு மாணவிகளின் மனுக்களை பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனா். இதனால் மாணவிகள் தங்கிப்பயில முடியாமல் தவித்து வருகின்றனா்.

மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடைபெறுவதால் நெடுந்தொலைவில் இருந்து வருபவா்கள் பெரும்பாலும் பள்ளிக்கு சரிவர வருவதில்லை.

எனவே, உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.