மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்

சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதா்மநாதேஸ்வரா் சமதே தா்மசம்வா்த்தினி கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:37 pm

DIN

சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதா்மநாதேஸ்வரா் சமதே தா்மசம்வா்த்தினி கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீதா்மநாதேஸ்வரா் சமதே தா்மசம்வா்த்தினி கோயிலில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

நிகழாண்டு ஏப்.5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதுமுதல் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மரத்தேரில் சுவாமியை மலா்காளால் அலங்காரம் செய்து வைத்து பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்துச் சென்றனா்.

வீதிவீதியாகச் சென்ற தோ் முன் பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் குமாரி அமாவாசை, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வகுமாரி செந்தில் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.