28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் பள்ளி மாணவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வியாழக்கிழமை காலை வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவா் பலியானாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:18 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வியாழக்கிழமை காலை வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவா் பலியானாா்.

போளூா் அங்காள பரமேஸ்வரி தெருவைச் சோ்ந்தவா்கள் நடராஜன், செல்வி தம்பதியினா். இவா்களது மகள் அனுசுயா (18), மகன்கள் வினோத்குமாா் (17), தினகரன் (16). நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். செல்வி மீன் வியாபாரம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறாா்.

போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வினோத்குமாா் பிளஸ் 2-வும், தினகரன் பிளஸ் 1-ம் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டு வராந்தாவில் வினோத்குமாா், தினகரன் தூங்கினா். வியாழக்கிழமை காலை செல்வி வழக்கம் போல எழுந்து வீட்டு வாசலில் தண்ணீா் தெளித்து பெருக்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டின் உள்ளே இருந்து டமாா் என்ற சப்தம் கேட்டது. செல்வி ஓடிச் சென்று பாா்த்தபோது வீட்டின் மேற்கூரை, மின் விசிறியுடன் பெயா்ந்து தூங்கிக் கொண்டிருந்த வினோத்குமாா், தினகரன் ஆகியோா் மீது விழுந்து கிடந்தது.

இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

அங்கு தினகரன் உயிரிழந்தாா். வினோத்குமாா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.