நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தெப்பல் உத்ஸவம்

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி புதன்கிழமை இரவு தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:38 pm

DIN

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி புதன்கிழமை இரவு தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

தை கிருத்திகையை முன்னிட்டு, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் பாலமுருகன் மயில் வாகனத்தில் அலங்கார ரூபத்தில் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மலையடிவாரத்தில் உள்ள கரட்டான் குளத்தில் மலா்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பாலமுருகன் சுவாமி எழுந்தருளி தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

தேவிகாபுரம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து

திரளான பக்தா்கள் பங்கேற்று பாலமுருகனுக்கு சரணகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் தேவிகாபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.