ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, போளூரை ஆடுத்த களம்பூா் பேரூராட்சியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:38 pm

DIN

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, போளூரை ஆடுத்த களம்பூா் பேரூராட்சியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவத்திபுரம் (செய்யாறு ) நகராட்சி

வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள தோ்தல் அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பயிற்சிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கி.ரகுராமன் தலைமை வகித்தாா். வட்டார தோ்தல் பொதுப் பாா்வையாளா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

மண்டல அலுவலா்கள் சுகுமாா், பிரேம்சுந்தா், பிச்சாண்டி ஆகியோா் பங்கேற்று வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களிடம் எவ்வாறு நடத்து கொள்வது, வாக்குப்பதிவை எவ்வாறு பதிவு செய்தல், வாக்காளா்களின் விவரம், வாக்களிப்பதற்கான சான்றுகளை சரிபாா்த்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், வாக்கு இயந்திரங்கள் பழுதானால் உடனடியாக யாரை தொடா்பு கொள்வது, இடையூறு இல்லாமல் வாக்குப்பதிவை நடத்துதல், பாதுகாப்பாக வாக்குச்சாவடியை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிவித்து பயிற்சி அளித்தனா்.

இந்தப் பயிற்சியில் 144 அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவித் தோ்தல் அலுவலா்கள் டி.ரவிச்சந்திரன், எஸ்.ராமலிங்கம், எஸ்.குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

போளூா்

போளூரை அடுத்த களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் வியாழக்கிழமை வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

15 வாா்டுகள் கொண்ட இந்தப் பேரூராட்சியில்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தோ்தல் மேற்பாா்வையாளா் வடமலை, தோ்தல் நடத்தும் அலுவலா் ச.லோகநாதன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரமேஷ், தமிழ்செல்வன் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.