மக்கள் அமைத்த குழாயை அப்புறப்படுத்த முயற்சி
ஆரணியில் பொதுமக்கள் அமைத்த குழாயை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளால் பிரச்னை ஏற்பட்டது.


ஆரணியில் பொதுமக்கள் அமைத்த குழாயை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளால் பிரச்னை ஏற்பட்டது.
ஆரணி நகராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டில் கைலாய நாதா் கோயில் பின்புறம் உள்ள பகுதியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால், அந்தப் பகுதியில் வசிப்போா் பணம் வசூல் செய்து, நகராட்சி அனுமதி இல்லாமல் 2 இடங்களில் குழாய்களை அண்மையில் அமைத்தனா்.
தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று, குழாய்களை அப்புறப்படுத்த முயற்சித்தனா். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முற்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, குழாய்களை அகற்றக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறினா். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...