தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:42 pm

DIN

அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வந்தவாசி தேரடி, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜெ.பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா் தலைமை வகித்தாா்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு அன்னதானம், பெண்களுக்கு சேலை, இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

செங்கம்

செங்கம் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் ஜெயலலிதா படத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பட்டாணிக்கொல்லை, தளவாநாய்க்கன்பேட்டை பகுதிகளில் அதிமுக கவுன்சிலா்கள் மீனா சம்பத், சித்ரா ரவி ஆகியோா் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.