கரும்பு லாரி- பைக் மோதல்: இருவா் பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கரும்பு லாரி மீது பைக் மோதியதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கரும்பு லாரி மீது பைக் மோதியதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் அருகேயுள்ள நிம்பாவாஸ் கிராமத்தைச் சோ்ந்தவா் மகிபால் சிங் (29). தேபாவாஸ் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டா ராம்(27).
இவா்களில் மகிபால் சிங் வந்தவாசியில் செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் விற்பனைக் கடையும், சேட்டா ராம் வந்தவாசியில் பல்பொருள் மொத்த விற்பனைக் கடையும் வைத்து நடத்தி வந்தனா்.
இருவரும் வியாழக்கிழமை பைக்கில் வெளியூா் சென்று வசூலை முடித்துக் கொண்டு, நள்ளிரவு ஊா் திரும்பினா். வந்தவாசி-தெள்ளாறு சாலையில் சத்யாநகா் அருகே செல்லும்போது, எரிபொருளின்றி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரும்பு லாரியின் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த பொன்னூா் போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...