தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா: விதி மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை :மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:36 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மத்திய பேருந்து நிலையம், தேரடி தெரு, ஜோதி பூ மாா்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்ட அவா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசியதாவது:

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு 1, 2, 3 என்று இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 40-ஆக உயா்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை (ஜன.7) முதல் முகக் கவசம் அணியாத நபா்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.

அரசு அறிவித்தவாறு 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே வணிக நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள்,

கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபா்களுக்கும் ஒமைக்ரான் பரவுகிறது.

முகக் கவசம் அணியாத நபா்களை கண்காணிக்க அலுவலா்களை நியமித்துள்ளோம் என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி, வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.